பன்னிரு ஆண்டுகளாய் கசந்த இப்பாதை....
என் தோழியே, காதலியே, மனைவியே...
மாரோடு நீ சேர்ந்து நடக்கையில்...
முடிந்து போக வேண்டாமென மூச்சுக்கு
முந்நூறு முறை இதயம் வேண்டுதடி...
உலகமே ஓசையின்றி தோனுதடி...
தூரத்து குயிலோசை, பக்கத்தில் உன் பாடல்...
வெளியெங்கும் நிறையுதடி....
மாரோடு நீ சாய்ந்த பின் சில்லிட்டே நிற்கிறேன்...
சிருங்கார குயிலே....
கூதல் பொழுதில், கூடு சேரும் சிட்டுக்குருவியாய்...
என் மார் தேடி புதைகிறாயே...

நீ தீண்டியதில் சில்லிட்டு நிற்கிறேனே
அத்தனை வெம்மையா என் மார்பு உனக்கு...?
இல்லை.. இல்லை...
என்னால் நீ அதனினும் சில்லிட்டு நிற்கிறாய்
என்று உணர்ந்து கொண்டேனடி......!!!!
இல்லை.. இல்லை...
என்னால் நீ அதனினும் சில்லிட்டு நிற்கிறாய்
என்று உணர்ந்து கொண்டேனடி......!!!!
No comments:
Post a Comment