Friday, May 2, 2014

மடி வேணுமம்மா..

அறிவா ஆயிரம் பேசுறேன்..
ஆறுதல் பல சொல்லுறேன்..
தெரிஞ்சமட்டும் நல்லது செய்யுறேன்..
தெளிவா வேலை செய்யுறேன்..

காசுக்கு சோறு திங்குறேன்..
களவாங்காம காசு சேக்குறேன்..
பொழப்புக்கு பொய் சொல்லுறேன்..
ஓடிஓடி நானுந் திரியுறேன்..

எல்லாம் இருப்பதா நினைப்பு..
எதுக்கும் கலங்காத மனசு..
நினைச்சுப் பார்த்தா நிசமில்லை..
மனசுல ஏதோ சுகமில்லை..

போதும் போதும்னு தோனுது..
பொழப்பு இப்போ நோகுது..
பொய்யா வந்த உறவெல்லாம்..
போனா போதும்னு தோனுது..

எல்லாம் வந்து சேர்ந்தாலும்..
ஏதோ ஒன்னு நிறையலை..
எங்க தேடி திரிஞ்சாலும்..
ஏதுன்னு எனக்குப் புரியலை..

காசுக்கு சோறு திங்குறேன்..
கடையெல்லாம் ஏறி இறங்குறேன்..
நிசமுன்னு ஏதும் இல்லை..
நினைவுக்கும் பிடி இல்லை..

நிசம் இப்போ புரியுதம்மா..
பாசம் தப்பி போனதம்மா..
நீ இங்க இல்லையம்மா..
அடுத்த நிமிஷம் அழுதிடுவேம்மா..
உன் மடி வேணுமம்மா..


No comments:

Post a Comment