குவளை நிறைந்து
மணந்து ஆவிபறந்து
கைவந்து சேரும்
'ஃபில்டர்' காபியாய்
உள்ளம் நிறைந்து
மகிழ்ந்து முகம்நிறைந்து
என்னுள் வந்தது
சுடச்சுட காதல்
கொள்ளளவு தாண்டி
பொங்கி வழியும்
'பாப்கார்ன்' போல்
உள்ளம் தாண்டி
பொங்கி வழிந்து - என்
தேகம் நிறைந்தது
சுடச்சுட காதல்
'டிவிட்டர்' போல்
ஃபாலோ செய்தேன்
'ஃபேஸ்புக்' போல்
ஒருமித்து விரும்பி
கருத்துப் பகிர
காத்துக் கிடக்கிறது
சுடச்சுட காதல்
பெட்டியில் அடைபட்டு
'அட்ரஸ்' தேடி
வேகமாய் உன் - வாசல்
வந்து சேரும்
சுடுசுடு 'பீட்சாவாய்'
சுடச்சுட என்காதல்..
மெனு கார்டில்மணந்து ஆவிபறந்து
கைவந்து சேரும்
'ஃபில்டர்' காபியாய்
உள்ளம் நிறைந்து
மகிழ்ந்து முகம்நிறைந்து
என்னுள் வந்தது
சுடச்சுட காதல்
கொள்ளளவு தாண்டி
பொங்கி வழியும்
'பாப்கார்ன்' போல்
உள்ளம் தாண்டி
பொங்கி வழிந்து - என்
தேகம் நிறைந்தது
சுடச்சுட காதல்
'டிவிட்டர்' போல்
ஃபாலோ செய்தேன்
'ஃபேஸ்புக்' போல்
ஒருமித்து விரும்பி
கருத்துப் பகிர
காத்துக் கிடக்கிறது
சுடச்சுட காதல்
பெட்டியில் அடைபட்டு
'அட்ரஸ்' தேடி
வேகமாய் உன் - வாசல்
வந்து சேரும்
சுடுசுடு 'பீட்சாவாய்'
சுடச்சுட என்காதல்..
ஆயிரம் பதார்த்தங்கள்
இருக்கட்டும் எனக்கென்ன?
என்விழி காண்பது
நான் விரும்பும் - சூடான
'சீஸ் மசால் தோசை' தான்
எனைச் சுற்றி
ஆயிரம் நங்கைகள்
இருக்கட்டும் எனக்கென்ன?
என்விழி காண்பது
நான் விரும்பும்
நீயும் சுடச்சுட - என்
காதலும்.
No comments:
Post a Comment