Friday, May 2, 2014

எனக்கான தனிமை..!

எனக்கான தனிமை - அதை
என்னிடம் விட்டிடுங்கள்..
அதில் உங்களுக்கான இடமில்லை..
அது - என் வலிகளால்
நான் அழுதிடும்
நேரம்...
அதில் உங்களுக்கு இடமில்லை...

உங்களை மகிழ்வித்து
மகிழ்ந்து கிடக்கும்
அந்த 'நான்'
முகத்திரை கலைய
தேடிடும் நேரம் தான்
தனிமை..

நத்தை முதுகில்
பாரமேற்றி - அதை
இரசித்துப் பார்க்கும்
வக்கிர காலம்..

வலிகள் தீர
இறக்கி வைக்க
முடியா பாரம்..

என் முகத்தில்
காரி உமிழ்ந்த
ஏமாற்றங்கள்

என் கனவுச் சிறகை
சிறை பிடித்த
பாரங்கள்..

என் முகத்துப் புன்னகை
போலியாக்கிய
போலிகள்..

இவையெல்லாம் நினைவு
வந்து - நான்
அழுதிடும் நேரம்
அந்த 'தனிமை'..
உள்ளூரிய இரணங்கள்
அழுது ஆற்றப்படாதவரை
உங்களின் 'ஆறுதல்'
களிம்புகள் வேலை
செய்யப்போவதில்லை..
ஆகவே

என் தனிமையில் - உங்களுக்கான
இடம் தேடாதீர்..
அதில் உங்களுக்கு

இடமில்லை....

No comments:

Post a Comment