Thursday, May 1, 2014

விளக்கவுரை


இந்த பதிப்பில் உள்ள எழுத்துக்கள், என்னால் நானறிந்து ஒளித்துவைக்கப்பட்ட (ஒளித்துவைத்திருக்கும்) என் உணர்ச்சிகள்... அந்த உணர்ச்சிகளை ஆவணப்படுத்தியிருக்கிறேன்...

இந்த எழுத்துக்கள் நீங்கள் படித்து ஆனந்திக்கவா.... இல்லை... இதிலுள்ள எழுத்துக்கள் நீங்கள் அதிலுள்ள விதம் அந்த நிகழ்வை பார்க்க மறந்ததை எடுத்துக்காட்டும் கருவி...

அல்லது, நீங்கள் இரசித்த விதத்திலேயே பதிவு செய்யப்பட்டிருக்கும் அந்த எழுத்துக்களின் மூலம் மீண்டும் அந்த தருணத்திற்கு உங்களை இட்டுச் செல்லும் கருவியாகவும் இருக்கும்...

இந்த இரண்டில் ஏதோ ஒன்று உங்கள் உணர்வுகளை தீண்டி, உங்களை அந்தந்த சூழலுக்கு இட்டுச் செல்லும் என்பது நிதர்சனம்..

சரி, இத்தனை காலம் தாழ்த்தி ஒளித்துவைத்திருந்த என் உணர்ச்சிகளை ஆவணப்படுத்த வேண்டிய அவசியம் என்னவென்று நீங்கள் யோசிக்கலாம்...

இந்த தொகுப்பு 'வியாபாரம்' கருதியில்லை... அதன் காரணம் வேறு...


ஒரு படைப்பாளிக்கு பெரிய வலியை கொடுப்பது, அந்த படைப்பு மதிக்கப்படாமலும் உதாசீணப்படுத்தப் படுவதும் தான்..

'என்ன (புதுசாக) சொல்லப் போறாங்க..?' என முன்னுரிமையும் அடையாளமும் கிடைக்கப் பெறாத நபர் நான்...

எனவே, என் உணர்ச்சிகளை ஒளித்துவைக்க துவங்கிவிட்டேன்.

இது போல், தன் உணர்வுகளை ஒளித்துவைத்து விட்டு காலப்போக்கில் அதை மறந்து போயிருக்கும் நபர்களின் அந்த உணர்வுகளை மீண்டும் ஒரு முறை உயிர்த்தெழச்செய்யும் கருவியாக இந்த ஆவணம் இருக்கட்டும் என்ற நம்பிக்கையில்..

அத்தனை பேரையும், அத்தனை கவிதைகளும் நிறைவு செய்ய வேண்டும் என்று நான் எழுதவில்லை...

ஒவ்வொரு கவிதையும் ஏதேனும் ஒருவரின் உணர்வுகளை சீண்டி உயிர்த்தெழச்செய்தால் அது போதும் எனக்கு...

நான் நம்புகிறேன், இந்த ஆவணத்தொகுப்பு உங்களின் உயிர் வந்து நிறையும்...


ஏனெனில், இது ஆவணப்படுத்தப்பட்ட (ஒளித்துவைத்திருந்த) நம்முடைய உணர்ச்சிகள்..

எனவே தான் சொல்கிறேன்.. இத்தொகுப்பு ஆவணப்படுத்தப் படாத உங்களில் பலரின் (ஒளித்துவைக்கப்பட்ட) உணர்ச்சிகளின் பிரதிநிதியாக இருக்கும்.....

 'ஒளித்துவைக்கப்பட்ட உணர்ச்சிகள்'

                                       - மதிலயா

No comments:

Post a Comment