Friday, May 2, 2014

கடல்

கரித்துப் பெருத்துக்
               கிடக்கும் கந்தர்வம்..
கரையோடு காதலால்
               கவிபாடும் கலைஞானி..
சூரிய சந்திரரை
               உண்ட பெருவாயன்..
உலகுக்கு உயிர்தந்த
               உண்மை தகப்பன்..
பூமியின் குருதியெல்லாம் - வந்தடையும்
               பூமியின் இதயம்..
வளர்மதி கண்டு
               வாய்பிளக்கும் சிற்றப்பன்..
வீசுங்காற்றில் சிகை
               உலர்த்தும் அலையாய்..
வெம்மை கிரணத்தால்
               மேலெழுவான் மேகமாய்..
தன்னகம் கொண்டதை
               வெளிக்காட்டா பெண்மை..
தன்னலமின்றி உயிர்வளர்க்கும்
               உலகத் தாய்..
நிலத்தைச் செதுக்கிய
               நிறை சிற்பி..
உலகம் வரைந்த
               உன்னத ஓவியன்..
வானுக்கு நீலம்பூசும்
               வஞ்சிக் கொடி..

கரை நின்றவனுக்கு
               கடவுளின் பாதம்..
கரை காண்பனுக்கு - உயிர்தந்த
               உயிருள்ள தாய்..
மாயையின் முடிவு

               உண்மையின் வாசல்..

No comments:

Post a Comment