பெரிய கம்பெனி
கைநிறைய சம்பளம்
வெளிநாட்டு வாய்ப்பு
கூட்டுச் செல்ல வண்டி
ரெண்டு வேளை சாப்பாடு
தேர்வானேன் நானும்...
பட்டணத்தில் உத்தியோகம்
ஊரெல்லாம் கொண்டாட்டம்
பட்டணம் போகும்...
முதப் பயல் நான்தானு...
நம்பித் தான் போனேன்
நாளைக்கு நமக்குத்தானு..
பிரச்சனை ஏதுமில்லை
முதலிரண்டு மாசம்
நோவு வந்து நானும்
லீவு கேட்டு நிக்கயிலே...
மாறுச்சு அத்தனையும்
மறுப்பு அவுக சொல்லயிலே...
கண்ணு போயி
கழுத்து போயி
தூக்கம் மறந்து
வேலை செஞ்சேன் நானும்..
பெரிய மனசோட தந்தாங்க
ஒரு 'பீட்சா டிரீட்டா..”
திருநெல்வேலினு ஒரு தேசமுண்டு
அங்க போகத்தான் - எனக்கும்
ஆசை உண்டு...
போய் பார்க்க சொந்த பந்தம்
நூறு உண்டு...
மாசமாசம் அப்ளை செஞ்சேன் நானும்...
டேபிள் வந்து சேரலை - லீவு
விசா இன்னிவரைக்கும்...
அப்பத்தா டோலக்கு
அத்தை மக மேகலை - பக்கத்து
பையனின் சிகரெட் வாடை
சொல்லாம சொல்லும் அப்பா
மெஸ் கடை வளையல் சத்தத்தில்
அக்கா..
பொத்திப் படுக்கும்
சேலையில் அம்மா வாசனையோட
பிசுபிசுத்தது என் கண்ணீரும்...
எதிர்த்துப் பேச திராணியில்ல
கேள்வி கேட்கும் சங்கமில்ல
நடமாடுறேன் வேலை செய்யுறேன்
தூங்குறேன்...
வாழவைக்குறேன் என்
'கார்ப்பரேட் ஆண்டேவ....”
ஏன்னா....
'நாகரிக கொத்தடிமை” நானுங்க....
No comments:
Post a Comment