மனம் மகிழும் தருணம்..
நீலவானின் வெள்ளைக் குருதி..
உலகப் பிறப்புகளின் உயிர்ப்பால்..
உயிரற்ற மண்ணையும் வளப்படுத்தும்..
வானில் தேங்கி நிற்கும்
வெள்ளைத் தேனடை..
பூமிப்பெண்ணின் சூழ் நிரப்பும்
வானத்து உயிர் அணுக்கள்..
பச்சைப் புல்வெளியின்
இரகசியக் காதலன்..
சிறுபிள்ளை உற்சாகத்தின்
ஆதார சூட்சுமம்..
கோடையில் வந்து
வழியும் தேன்மாரி..
இல்லாத இறைவன்..
இருக்கின்ற கர்ணன்..
அளவளாவும் நண்பன்..
அன்பிற்கிறங்கும் அடியான் - நாம்
சேமிக்கும் திருட்டு..
செலவழிக்கும் வரவு..
கோடையின் தவம்..
கார்காலச் சாபம்..
அழகு ஜதிபாடும்
வெள்ளைக் குயில்..
வானில் நடனமிடும்
கருப்பு மயில்..
மணம் பரப்பும் - குறுங்கால
மழை மாலை..
நெருப்பிடம் சேர்க்கும் - குளிர்
வண்ணக் கனிகை..
கட்டில் நாடும்
மயக்க நேரம்..
மற்றவை மறக்கும்
போதை காலம்..
அறிந்து விலகும்
பணிநாள் நரகம்..
விரும்பி ஏற்கும்
இசிவுநாள் சொர்க்கம்..
மரங்களின் கரைபோக்கும்
தலைக் குளியல்..
வானக்குழந்தை வாய்வடிக்கும்
எச்சில் ஊற்று..
வானம்பார்க்கும் உழவனின்
இன்பக் கீற்று..
பாலை கழனி - பகிர்ந்தளிக்கும்
அறிவு ஊற்று..
எரியும் மனம் - நீர்க்கச்
செய்யும் நீளக்கம்பிகள்..
புதைந்த வீரியம் - கிளர்ந்தெடுக்கும்
உற்சாகக் கருவிகள்..
பூமியில் கொண்டதை - பூமியில்
கொடுக்கும் விந்தைத் திருடன்..
நீலவானின் வெள்ளைக் குருதி..
உலகப் பிறப்புகளின் உயிர்ப்பால்..
உயிரற்ற மண்ணையும் வளப்படுத்தும்..
வானில் தேங்கி நிற்கும்
வெள்ளைத் தேனடை..
பூமிப்பெண்ணின் சூழ் நிரப்பும்
வானத்து உயிர் அணுக்கள்..
பச்சைப் புல்வெளியின்
இரகசியக் காதலன்..
சிறுபிள்ளை உற்சாகத்தின்
ஆதார சூட்சுமம்..
கோடையில் வந்து
வழியும் தேன்மாரி..
இல்லாத இறைவன்..
இருக்கின்ற கர்ணன்..
அளவளாவும் நண்பன்..
அன்பிற்கிறங்கும் அடியான் - நாம்
சேமிக்கும் திருட்டு..
செலவழிக்கும் வரவு..
கோடையின் தவம்..
கார்காலச் சாபம்..
அழகு ஜதிபாடும்
வெள்ளைக் குயில்..
வானில் நடனமிடும்
கருப்பு மயில்..
மணம் பரப்பும் - குறுங்கால
மழை மாலை..
நெருப்பிடம் சேர்க்கும் - குளிர்
வண்ணக் கனிகை..
கட்டில் நாடும்
மயக்க நேரம்..
மற்றவை மறக்கும்
போதை காலம்..
அறிந்து விலகும்
பணிநாள் நரகம்..
விரும்பி ஏற்கும்
இசிவுநாள் சொர்க்கம்..
மரங்களின் கரைபோக்கும்
தலைக் குளியல்..
வானக்குழந்தை வாய்வடிக்கும்
எச்சில் ஊற்று..
வானம்பார்க்கும் உழவனின்
இன்பக் கீற்று..
பாலை கழனி - பகிர்ந்தளிக்கும்
அறிவு ஊற்று..
எரியும் மனம் - நீர்க்கச்
செய்யும் நீளக்கம்பிகள்..
புதைந்த வீரியம் - கிளர்ந்தெடுக்கும்
உற்சாகக் கருவிகள்..
பூமியில் கொண்டதை - பூமியில்
கொடுக்கும் விந்தைத் திருடன்..
No comments:
Post a Comment